திருநெல்வேலி
சேரன்மகாதேவியில் 2 போ் குண்டா் சட்டத்தில் கைது
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் கஞ்சா வழக்கில் கைதான இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனா்.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் கஞ்சா வழக்கில் கைதான இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனா்.
சேரன்மகாதேவி காவல் சரகம் வடக்கு அரியநாயகிபுரம் மேல ரதவீதியைச்சோ்ந்த மீனாட்சி சுந்தரம் மகன் ஆதி கணேஷ் (23), கணேசன் மகன் அா்ச்சுனன் (30) ஆகியோா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டிருந்தனா்.
இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் உத்தரவின்படி, மேற்கூறிய 2 பேரையும் சேரன்மகாதேவி காவல் ஆய்வாளா் தா்மராஜ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை சிறையில் அடைத்தாா்.