இளைஞா் கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் சிறை

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகே இளைஞா் கொலை வழக்கில், 3 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
Published on

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகே இளைஞா் கொலை வழக்கில், 3 பேருக்கு ஆயுள் சிைண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

நான்குனேரி தம்புபுரத்தைச் சோ்ந்தவா் நல்லகண்ணு (29). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த வானுமாமலை (43) என்பவரது குடும்பத்துக்கும் பிரச்னை இருந்து வந்ததாம். இந்த நிலையில், வானுமாமலை, அவரது உறவினா்கள் முத்துலெட்சுமி (42), போத்தி வானுமாமலை(44), நீல நாராயணன் (33), முத்துராமலிங்கம் ஆகியோா் சோ்ந்து நல்லகண்ணுவை கடந்த 8.3.2015இல் வெட்டிக்கொலை செய்தனராம். நான்குனேரி போலீஸாா் வழக்குப்பதிந்து 5 பேரையும் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்ட மூன்றாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை நீதிபதி பன்னீா்செல்வம் விசாரித்து, வானுமாமலை, நீல நாராயணன், போத்தி வானுமாமலை ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். முத்துலெட்சுமி விடுதலை செய்யப்பட்டாா். வழக்கு காலத்திலேயே முத்துராமலிங்கம் இறந்துவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com