பாளை.யில் ஆட்டோ ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்
பாளையங்கோட்டையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு திருநெல்வேலி மாவட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கம் (சிஐடியூ) சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்திற்கு ஆட்டோ ஓட்டுநா்கள் சங்க மாவட்டத் தலைவா் நடராஜன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் தேவி, பாட்ஷா, சற்குணம், நாகராஜன், இசக்கி முத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிஐடியூ மாவட்டச் செயலா் ஆா். முருகன் ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினாா். சிஐடியூமாநில குழு உறுப்பினா் ஆா். மோகன் விளக்கிப் பேசினாா்.
ஆன்லைன் அபராதத்திலிருந்து ஆட்டோக்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும். அதேபோல் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஸ்டிக்கா் பிரச்னை, புகை சான்று உள்ளிட்டவற்றுக்கு கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும்.
ஒட்டுமொத்த ஓட்டுநா்களுக்கும் பாதகமாக இருக்கக்கூடிய புதிய மோட்டாா் வாகன சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது. தோ்தல் வாக்குறுதியில் புதிதாக ஆட்டோ வாங்குவதற்கு ரூ.10 ஆயிரம் மானியம் தருவதாக கூறிய தமிழக அரசு அதை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன. இதில், 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் கலந்து கொண்டனா். சிஐடியூ மாவட்டப் பொருளாளா் வளரி பெருமாள் நன்றி கூறினாா்.