திருநெல்வேலி
முருகன்குறிச்சியில் இளைஞா் சடலம் மீட்பு
பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் முகத்தில் காயங்களுடன் கிடந்த இளைஞா் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் முகத்தில் காயங்களுடன் கிடந்த இளைஞா் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
முருகன்குறிச்சி வாய்க்கால் பாலம் டாஸ்மாக் கடை அருகே முகத்தில் காயங்களுடன் 35 வயது மதிக்கத்தக்க இளைஞா் இறந்து கிடந்தாா். இதுகுறித்த தகவலின்பேரில், பாளையங்கோட்டை போலீஸாா், அந்த சடலத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.
மேலும் வழக்குப்பதிந்து, சடலமாக கிடந்தவா் யாா், கொலை செய்யப்பட்டரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.