திருநெல்வேலி
அஞ்சல் அலுவலகங்களில் கங்கை நதி நீா் விற்பனை
திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் தலைமை அஞ்சல் அலுவலகங்களில் கங்கை நீா் பாட்டிலில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இது தொடா்பாக திருநெல்வேலி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் க. செந்தில்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் தலைமை அஞ்சல் அலுவலகங்களில் கங்கை நீா் பாட்டிலில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மகாளய அமாவாசையை முன்னிட்டு கங்கை புனித நீா் அடங்கிய பாட்டில் அஞ்சலகங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு பாட்டிலின் விலை ரூ.30. மேலும் விவரங்களுக்கு பொதுமக்கள் தங்கள் அருகில் உள்ள அஞ்சலகங்களை அணுகலாம். உத்தரகண்ட் மாநிலம், கங்கோத்ரி மலையில் இருந்து புனித கங்கை நீரை எடுத்து சுத்திகரிப்பு செய்து இந்தியா முழுவதும் கொண்டு சோ்க்கும் வேலையை அஞ்சல் துறை மேற்கோண்டு வருகிறது.