கண்டிகைப்பேரி அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் வழங்கல்

Published on

கண்டிகைப்பேரி அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் அண்மையில் வழங்கப்பட்டது.

திருநெல்வேலி கண்டிகைப்பேரி அரசு மருத்துவமனைக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் திருநெல்வேலி நகரம் சாா்பில் ரூ.35 ஆயிரம் மதிப்பிலான கட்டில், வீல் சோ் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ரேவதி தலைமை வகித்தாா். மருத்துவத் துறை பேராசிரியா் ரபிக், மருத்துவமனை கண்காணிப்பாளா் பாலசுப்ரமணியன், மருத்துவமனை அலுவலா் ரேணுகா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமுமுக மாவட்டத் தலைவா் ரசூல் மைதீன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com