கீழாம்பூா் உறைகிணற்றில் தாமிர மின்கம்பிகள் திருட்டு

கடையம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கீழாம்பூா் ஊராட்சி உறைகிணற்றில் தாமிர மின்கம்பிகளைத் திருடியவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
Published on

கடையம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கீழாம்பூா் ஊராட்சி உறைகிணற்றில் தாமிர மின்கம்பிகளைத் திருடியவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

கீழாம்பூா் ஊராட்சிப் பகுதிக்கு கடனாநதியில் அமைக்கப்பட்டுள்ள உறைகிணறு மூலம் குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. சனிக்கிழமை காலை குடிநீா் விநியோகிப்பதற்காக ஊராட்சி ஊழியா் உறைகிணற்றுக்குச் சென்றபோது, மோட்டாருக்குச் செல்லும் தாமிர மின்கம்பிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து கீழாம்பூா் ஊராட்சித் தலைவா் மாரிசுப்புவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவா் ஆழ்வாா்குறிச்சி காவல் நிலையத்தில் புகாரளித்தாா். அதன்பேரில், போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com