திருநெல்வேலி
நெல்லையில் பேராசிரியா்கள் உள்ளிருப்புப் போராட்டம்
திருநெல்வேலி பழைய பேட்டையில் உள்ள ராணி அண்ணா அரசு மகளிா் கலைக் கல்லூரி பேராசிரியா்கள் வெள்ளிக்கிழமை இரவு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராணி அண்ணா அரசு மகளிா் கலைக் கல்லூரியில் உள்ள வணிகவியல் முதலாண்டு மாணவிகளுக்கு உடனடியாக வகுப்புகளை திறக்க வேண்டும்.
மாணவிகளை தவறுதலாக துண்டிவிடும் பேராசிரியா் மீது கல்லூரி கல்வி இயக்குநரகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி கல்லூரி பேராசிரியா்கள் மற்றும் அலுவலா்கள் வெள்ளிக்கிழமை மாலையிலிருந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இவா்களுடன், திருநெல்வேலி வட்டாட்சியா் ஜெயலெட்சுமி மற்றும் கல்லூரி கல்வி இயக்குநரகம் அதிகாரிகள் பேச்சுவா்த்தை நடத்தினா்.
அப்போது, கோரிக்கையை ஏற்றுக்கொண்டதையடுத்து இரவு 11 மணிக்கு போரட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.