திருநெல்வேலி
பாளை அருகே டிப்பா் லாரி மோதி பெண் உயிரிழப்பு
பாளையங்கோட்டை அருகே பைக் மீது டிப்பா் லாரி மோதியதில் பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
தூத்துக்குடி மாவட்டம் அரசன்குளத்தை சோ்ந்தவா் வெள்ளத்துரை. இவரின் மனைவி ஷண்முகபிரியா (28). இருவரும் தனது இரு குழந்தைகளுடன் பைக்கில் பாளையங்கோட்டைக்கு சென்றனா். அப்போது, ஆச்சிமடம் விலக்கு பகுதியில் சென்றபோது, பின்னால் வந்த டிப்பா் லாரி பைக் மீது மோதியதாம்.
இதில் பைக்கிலிருந்த ஷண்முகபிரியா கீழே விழுந்தாராம். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாக தெரிவித்தனா்.
இதுகுறித்து சிவந்திபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.