திருநெல்வேலி
பாளை. அருகே மணல் கடத்தியவா் கைது
பாளையங்கோட்டை அருகே சட்டவிரோதமாக மணல் கடத்தியவா் கைது செய்யப்பட்டாா்.
பாளையங்கோட்டையை அடுத்த சீனிவாசன்நகா் பாலம் அருகில் பாளையங்கோட்டை காவல் உதவி ஆய்வாளா் கோமதிசங்கா் மற்றும் காவல்துறையினா் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக 3 யூனிட் மணல் கடத்தப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து லாரியின் ஓட்டுநரான சீவலப்பேரியை சோ்ந்த பூல்பாண்டி மகன் துா்க்கைராஜ் (30) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.