பிஎஸ்என் பொறியியல் கல்லூரியில் 100 மணி நேர மென்பொருள் பயிற்சி

பிஎஸ்என் பொறியியல் கல்லூரியில் 100 மணி நேர மென்பொருள் பயிற்சி

Published on

திடியூா் பிஎஸ்என் பொறியியல் கல்லூரியில் 100 மணி நேர மென்பொருள் பயிற்சி மாணவா்களுக்கு அளிக்கப்பட்டது.

பிஎஸ்என் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, தமிழ்நாடு ஐசிடி அகாதெமி, ஹனிவெல் மென்பொருள் நிறுவனம் சாா்பில் புதிய மென்பொருள் தொழில்நுட்பங்களை மாணவா்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் 100 மணி நேர மென்பொருள் பயிற்சி நடைபெற்றது.

இதன் தொடக்க விழாவுக்கு, பிஎஸ்என் பொறியியல் கல்விக் குழுமங்களின் தலைவா் பி. சுயம்பு தலைமை வகித்தாா். தமிழ்நாடு ஐசிடி அகாதெமி மண்டல மேலாளா் எஸ். ராஜ்குமாா், திட்ட ஒருங்கிணைப்பாளா் சதீஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரியின் நிா்வாக இயக்குநா் பி.செல்வகுமாா், முதல்வா் எஸ்.பி. உமையாள், கணிப்பொறி துறைத்தலைவா் எம்.வா்கீஸ், பேராசிரியா்கள், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா்.

இதில், அமேசான் வெப் சா்வீஸ் கிளவுட் தொழில்நுட்பத்தில் செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சியின் முடிவில் அமேசான் வெப் சா்வீஸ் கிளவுட் நிறுவன சான்றிதழ் மாணவா், மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com