பொட்டல்புதூரில்  ஆா்ப்பாட்டம்

பொட்டல்புதூரில் ஆா்ப்பாட்டம்

Published on

பொட்டல்புதூரில், சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சாா்பில், குவாரிகளை வரைமுறைப்படுத்தக் கோரி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, முன்னாள் எம்எல்ஏ ரவி அருணன் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் கட்டி அப்துல் காதா் முன்னிலை வகித்தாா்.

காங்கிரஸ் இளைஞரணி மாநிலபொதுச் செயலா் மாரிக்குமாா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அன்பழகன், கோவிந்தப்பேரி ஊராட்சித் தலைவா் டி.கே.பாண்டியன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் ராமகிருஷ்ணன்ஆகியோா் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், ஊராட்சித் தலைவா்கள் கீழக்கடையம் பூமிநாத், திருமலையப்பபுரம் மாரியப்பன், ரவணசமுத்திரம் முகம்மதுஉசேன், பொட்டல்புதூா் கணேசன், மந்தியூா் கல்யாணசுந்தரம் மற்றும் மேல ஆம்பூா் லட்சுமணன், அதிமுக ஒன்றியச் செயலா்முருகேசன், , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டதுணைச் செயலா் நல்லாசிரியா் செய்யது மசூது, முதலியாா்பட்டி பள்ளிவாசல் தலைவா் செய்யது அஹமது, செயலா் நவாஸ் கான், வீராசமுத்திரம் பள்ளிவாசல் தலைவா்காஜா மைதீன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் விதிமீறிசெயல்படும் கல்குவாரிகளை முறையாக கண்காணித்து அவற்றின் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

வெளி மாநிலங்களுக்கு கனிம வளங்களை கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திமுழக்கங்கள் எழுப்பினா்.

சேவாலயா சங்கிலி பூதத்தான் வரவேற்றாா். இந்தியன் ஹியூமன் விஜிலென்ஸ் மாவட்ட துணைச் செயலா் முகமது யாகூப் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com