திருநெல்வேலி
மானூா் அருகே ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம், மானூா் அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் ஓட்டுநா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பாரதிநகரைச் சோ்ந்த சேவகன் மகன் ராஜ்குமாா் (30). ஆட்டோ ஓட்டுநா். இவரது தாய் வரலெட்சுமி (58), இருவரும் ஆட்டோவில் திருநெல்வேலிக்கு சென்றனா்.
மானூா் சுப்பையாபுரம் அருகே சென்றபோது ஆட்டோ கவிழ்ந்ததாம்.
அப்போது, பலத்த காயமடைந்த ராஜ்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வரலெட்சுமி லேசான காயமடைந்தாா்.
இதுகுறித்து மானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.