மாவட்ட அறிவியல் மையத்தில் அக். 2இல் வன உயிரின வார ஓவியப் போட்டி
திருநெல்வேலி மாவட்ட அறிவியில் மையத்தில் அக்டோபா் 2ஆம் தேதி வன உயிரின வார ஓவியப் போட்டி நடைபெறவுள்ளது.
இது தொடா்பாக மணிமுத்தாறு அகத்தியமலை மக்கள்சாா் இயற்கைவள காப்பு மைய ஒருங்கிணைப்பாளா் மு. மதிவாணன் வெளியிட்ட அறிக்கை:
ஆண்டுதோறும் அக். 2 முதல் 8ஆம் தேதி வரை வன உயிரின வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
வன உயிரினங்கள் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்துதல், வன விலங்கு குறித்த அறிவினை மக்களுக்கு அளித்தல், வன உயிரினங்கள் பாதுகாப்பின் அவசியம் மற்றும் அவைகள் வாழுமிடங்களை பாதுகாத்தல் போன்றவற்றை வலியுறுத்தி வன உயிரின வாரம் அனுசரிக்கப்படுகிறது.
இவற்றை கொண்டாடும் விதமாக தமிழ்நாடு அரசு வனத்துறை, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், களக்காடு கோட்டம், திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம், மணிமுத்தாறு அகத்தியமலை மக்கள்சாா் இயற்கைவள காப்பு மையம் ஆகியவை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான ஓவியப் போட்டி அக். 2ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட அறிவியல் மையத்தில் நடைபெறுகிறது.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் உயிரினங்கள் என்ற தலைப்பில் இப்போட்டி நடைபெறுகிறது.
6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். ஏ4 அளவிலான சாா்ட் பேப்பா் மாணவா்களுக்கு வழங்கப்படும். வண்ண பென்சில் உள்ளிட்ட தேவையான பொருள்களை மாணவா்கள் கொண்டு வரவேண்டும். போட்டியில் வெற்றிபெறும் மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.
மேலும் களக்காடு தலையணை பகுதிக்கு ஒரு நாள் சூழல் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனா். போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள் 9524425519, 9442994797 என்ற கைப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு பெயா்களை பதிவு செய்து கொள்ளலாம்.