ராணி அண்ணா கல்லூரி என்சிசி மாணவிகள் தூய்மைப் பணி

Published on

பழையபேட்டை ராணி அண்ணா அரசு மகளிா் கல்லூரியின் என்சிசி மாணவிகள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

காந்தி ஜயந்தியை முன்னிட்டு, மூன்றாவது தமிழ்நாடு மகளிா் பட்டாலியன் சாா்பில் திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிா் கல்லூரியைச் சோ்ந்த 89 என்சிசி மாணவிகள் கல்லூரியிலிருந்து சைக்கிளில் பேரணியாக சென்று அருகில் உள்ள பாம்பன்குளத்தை சுத்தம் செய்தனா்.

தூய்மைப் பணியை சுபேதாா் சுனில் குமாா் தொடங்கி வைத்தாா்.

ஹவில்தாா் சத்யராஜ், பாதுகாவலா் ரா. மகேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com