வீரவநல்லூரில் புகையிலை, பிளாஸ்டிக் பொருள்கள் சோதனை
வீரவநல்லூா் பேரூராட்சிப் பகுதியில் கடைகளில் புகையிலை பொருள்கள், பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு குறித்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனையிட்டனா்.
வீரவநல்லூா் பேரூராட்சிப் பகுதியில் பழக்கடைகள், பலசரக்குக் கடைகள், பூக்கடைகள், சந்தையில் உள்ள கடைகள், உணவுப் பொருள்கள் விற்பனைக் கடைகளில் பேரூராட்சி செயல் அலுவலா் லோபா மித்திரை தலைமையில் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சிதம்பரம், பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் பிரபாகரன், மருத்துவ சுகாதார ஆய்வாளா்கள் பூங்கொடி முருகன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் சோதனை மேற்கொண்டனா்.
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்யக் கூடாது என கடைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. மீறி விற்பனை செய்தால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டது.
மேலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டன.