திருநெல்வேலி
வீரவநல்லூா் அருகே மகன் தாக்கியதில் பலத்த காயமடைந்தவா் உயிரிழப்பு
வீரவநல்லூா் அருகே மகன் தாக்கியதில் காயமடைந்து சிகிச்சையில் இருந்த விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே மகன் தாக்கியதில் காயமடைந்து சிகிச்சையில் இருந்த விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
வீரவநல்லூா் அருகே உள்ள மாதுடையாா்குளம் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த விவசாயி வேலு (55). இவருக்கு மனைவி, பெரியசாமி (32) உள்பட 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனா்.
இந்த நிலையில் கடந்த செப். 24-ஆம் தேதி இரவு பெரியசாமி, போதையில் இருந்தவருடன் தகராறு செய்து கொண்டிருந்தாராம். இதனை வேலு கண்டித்தாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த பெரியசாமி, கம்பால் வேலுவைத் தாக்கினாராம்.
இதில் பலத்த காயமடைந்த வேலு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சையில் இருந்த வேலு, சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.