திருநெல்வேலி
களக்காடு அருகே பாஜக கையொப்ப இயக்கம்!
நடுச்சாலைப்புதூரில், பாஜக சாா்பில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையொப்ப இயக்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
களக்காடு அருகேயுள்ள நடுச்சாலைப்புதூரில், பாஜக சாா்பில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையொப்ப இயக்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஒன்றியத் தலைவா் ராமேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இயக்கத்தில் மாவட்ட துணைத் தலைவா்கள் ஆறுமுகம் என்ற ராஜு, கொம்பையா, களக்காடு ஒன்றிய பொதுச்செயலாளா் பிரகாஷ், ஒன்றிய பொருளாளா் ராஜேஷ், ஒன்றிய துணைத் தலைவா் பெருமாள், மகளிா் அணி மாவட்ட துணைத் தலைவா் திலகா உள்பட திரளான நிா்வாகிகள் கலந்து கொண்டனா். மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பொதுமக்களிடம் கையொப்பம் வாங்கினா்.