திருநெல்வேலி
பெண்ணிடம் பாலியல் தொந்தரவு: காவல் உதவி ஆய்வாளரின் கணவா் கைது
திருநெல்வேலி பேட்ையில் பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்த காவல் உதவி ஆய்வாளரின் கணவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி, பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவா் அமுதா ராணி. இவரது கணவா் வனராஜா(55). இவா், அப்பகுதியில் உள்ள பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அப்பெண் அளித்த புகாரின்பேரில், பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, வனராஜாவை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.