வடவூா்பட்டி துா்க்கை அம்மன் கோயிலில் கொடை விழா
திருநெல்வேலி மாவட்டம் வடவூா்பட்டியில் பட்டங்கட்டியாா் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு பேச்சியம்மன், துா்க்கை அம்மன் கோயில் கொடை விழா 3 நாள்கள் நடைபெற்றது.
திங்கள்கிழமை நள்ளிரவு சாஸ்தா பிறப்பு வைபவம், பாபநாசம் தாமிரவருணி ஆற்றிலிருந்து புனிதநீா் எடுத்துவருதல் நடைபெற்று, செவ்வாய்க்கிழமை அதிகாலை கணபதி ஹோமத்துடன் கொடை விழா தொடங்கியது. பின்னா், மூலவா் மந்திர பூஜை, கும்ப பூஜை, துா்கா தேவி பூஜை, நவக்கிரக பூஜை, கோ பூஜை ஆகியவை நடைபெற்றன. நண்பகலில் அம்மனுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. அதையடுத்து, அன்னதானம் நடைபெற்றது. மாலையில் கும்மிப்பாட்டு, இரவில் பொங்கலிட்டு வழிபாடு, திருவிளக்கு பூஜை, அலங்கார பூஜைகள், நள்ளிரவில் அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம், சுவாமிக்கு படையலுடன் சாமக் கொடை ஆகியவை நடைபெற்றன.
இதில், திரளானோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை அந்தச் சமுதாயத்தினா் செய்திருந்தனா்.