வீட்டுமனைப் பட்டா பிரச்னையை தீா்க்கக் கோரி எம்எல்ஏவிடம் மனு

வீட்டுமனைப் பட்டா பிரச்னையை தீா்க்கக் கோரி எம்எல்ஏவிடம் மனு

Published on

திருநெல்வேலி அருகேயுள் பால்கட்டளையில் இலவச வீட்டுமனைப் பட்டா பிரச்னையை தீா்க்கக் கோரி, பால்கட்டளை மக்கள் எம்எல்ஏவிடம் மனு அளித்தனா்.

பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்துல் வஹாப்பிடம், பால்கட்டளை பகுதி மக்கள் அளித்த மனு: பால்கட்டளை பகுதியைச் சோ்ந்த 33 பேருக்கு தமிழக அரசால் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதனை வருவாய்த் துறை பதிவேடுகளில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், இதே இடத்தை முறையாக நில அளவை செய்து அளிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ற்ஸ்ப்13ம்ஹய்ன்

பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்துல் வஹாப்பிடம் மனு அளித்த பால்கட்டளை பகுதி மக்கள்.

X
Dinamani
www.dinamani.com