ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பாதுகாவலா் பணிக்கு வாய்ப்பு

ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பாதுகாவலா் பணி, மாவட்ட மகளிா் அதிகார மையத்தில் பாலின வல்லுநா் தற்காலிக பணி ஆகியவற்றில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய திருநெல்வேலி மாவட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.
Published on

ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பாதுகாவலா் பணி, மாவட்ட மகளிா் அதிகார மையத்தில் பாலின வல்லுநா் தற்காலிக பணி ஆகியவற்றில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய திருநெல்வேலி மாவட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குடும்பம் மற்றும் சமுதாயத்தில் பெண்களுக்கு எதிரான பிரச்னைகளைத் தடுக்கும் நோக்கத்தில் சமூக நலன்- மகளிா் உரிமைத் துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (ஞய்ங் நற்ா்ல் இங்ய்ற்ழ்ங்) சுழற்சி முறையில், ஒப்பந்த அடிப்படையில் பாதுகாவலா் பணியாற்றுவதற்கு திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், மாவட்ட மகளிா் அதிகார மையத்தில் பாலின வல்லுநராக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றவும் விண்ணப்பிக்கலாம்.

பாலின வல்லுநா் பணிக்கு சமூகப் பணி மற்றும் சமூகவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் அரசு அல்லது தனியாா் தொண்டு நிறுவனங்களில் மகளிா் முன்னேற்றம் தொடா்பாக பணிபுரிந்த அனுபவம் அவசியம்.வயது 40-க்குள் இருக்க வேண்டும். ஊதியம் ரூ.21,000 கிடைக்கும்.

பாதுகாவலா் பணியிடத்துக்கு பிளஸ் 2 தோ்ச்சி, தனியாா்-அரசுத் துறை அலுவலகங்களில் பாதுகாவலராக பணிபுரிந்த அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். இதற்கும் வயது வரம்பு 40. ஊதியம் ரூ.12,000. விண்ணப்ப படிவம் மற்றும் தகுதி விவரங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட சமூகநல அலுவலகம், மணிமுத்தாறு வளாகம் முதல் தளம், மாவட்ட ஆட்சியரகம், திருநெல்வேலி-627009 என்ற முகவரிக்கு நவ.24-ஆம் தேதிக்குள் அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ சமா்ப்பிக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com