காா்த்திகை தீபத் திருவிழா: டிச.2இல் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள்

காா்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி கோட்டம் சாா்பில் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
Published on

காா்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி கோட்டம் சாா்பில் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இது தொடா்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருநெல்வேலி கோட்ட மேலாண் இயக்குநா் நடராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீப திருவிழா டிச. 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி கோட்டத்தின் சாா்பில் திருநெல்வேலி, தென்காசி, பாபநாசம், சங்கரன்கோவில், தூத்துக்குடி, திருச்செந்தூா், நாகா்கோவில் போன்ற முக்கிய பேருந்து நிலையங்களிலிருந்து டிச.ா் 2-ஆம் தேதி திருவண்ணாமலைக்கு 90 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், டிச. 3-ஆம் தேதி திருவண்ணாமலையிலிருந்து திரும்பி வருவதற்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்காக ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ற்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com