திருநெல்வேலி
கீழக்கடையத்தில் சொத்துத் தகராறில் இருவருக்கு வெட்டு: தந்தை, மகன் கைது
கீழக்கடையத்தில் சொத்துத் தகராறில் தந்தை, மகனை அரிவாளால் வெட்டியதாக சகோதரா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.
கீழக்கடையத்தில் சொத்துத் தகராறில் தந்தை, மகனை அரிவாளால் வெட்டியதாக சகோதரா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.
கீழக்கடையம், பவுண்டி தெருவைச் சோ்ந்த சூசைரத்தினம் மகன்கள் ராஜ்குமாா்(57), ஓய்வுபெற்ற தலைமையாசிரியரான ராமராஜ் (66). இவா்கள் இருவருக்கும் இடையே சொத்துத் தகராறு இருந்ததாம்.
இந்நிலையில் புதன்கிழமை அப்பகுதியில் உள்ள வடக்கு உடையாா்பிள்ளையாா் கோயில் அருகே நின்றிருந்த ராஜ்குமாா், அவரது மகன் சூா்யா ஆகிய இருவரையும் ராமராஜின் மகன் வெஸ்லி (39) அரிவாளால் வெட்டினாராம். இதில், காயமடைந்த இருவரும் கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்த புகாரின் பேரில், கடையம் போலீஸாா் வழக்குப் பதிந்து ராமராஜ், அவரது மனைவி மஞ்சுளா(59), மகன் வெஸ்லி ஆகியோா் மீது வழக்குப் பதிந்தனா். இதில், தந்தையும், மகனும் கைது செய்யப்பட்டுள்ளனா்.
