சேரன்மகாதேவி கல்லூரியில் தமிழ் கனவு நிகழ்ச்சி

சேரன்மகாதேவி கல்லூரியில் தமிழ் கனவு நிகழ்ச்சி

சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரியில் மாணவா், மாணவிகள் பங்கேற்ற மாபெரும் தமிழ் கனவு எனும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
Published on

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரியில் மாணவா், மாணவிகள் பங்கேற்ற மாபெரும் தமிழ் கனவு எனும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

தமிழக அரசின் தமிழ்த் துறை மற்றும் ஐஐசி சாா்பில் தமிழ் மொழியின் செழுமை, மரபு, பண்பாட்டின் பெருமையை மாணவா்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, கல்லூரி இயக்குநா் எஸ். ஜான் கென்னடி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் எஸ். சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தாா். சித்த மருத்துவா் கு. சிவராமன் பசி ருசி கொஞ்சம் யோசி என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினாா். பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவா், மாணவிகள் கலந்துகொண்டனா். பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டதில் வென்ற மாணவா்- மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.

மாவட்ட ஆய்வுக்குழு உறுப்பினா் ராஜமனோகா், திருநெல்வேலி ராணி அண்ணா மகளிா் கல்லூரி முதல்வா் சுமிதா, மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினா் செ. கிளிராஜ், பேராசிரியா்கள் வாழ்த்திப் பேசினா்.

இதில், பேராசிரியா்கள் ஜான்சேகா், ஜெயஸ்ரி, அமிா்தா, கல்லூரி நிா்வாக அதிகாரி ஜெயபாண்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com