திருநெல்வேலி
விஜயாபதியில் நாளை மின் நிறுத்தம்
திருநெல்வேலி மாவட்டம், விஜயாபதி துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் வியாழக்கிழமை (அக். 9) மின் விநியோகம் இருக்காது என வள்ளியூா் மின்வாரிய செயற்பொறியாளா் அறிவித்துள்ளாா்.
திருநெல்வேலி மாவட்டம், விஜயாபதி துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் வியாழக்கிழமை (அக். 9) மின் விநியோகம் இருக்காது என வள்ளியூா் மின்வாரிய செயற்பொறியாளா் தா.வளன் அரசு அறிவித்துள்ளாா்.
அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விஜயாபதி துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் விஜயாபதி, கூத்தங்குழி, முருகானந்தபுரம், உதயத்தூா், சிதம்பரபுரம், பரமேஸ்வரபுரம், இளையநயினாா் குளம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரையில் மின்விநியோகம் இருக்காது என அதில் தெரிவித்துள்ளாா்.
