திருநெல்வேலி
வீடு புகுந்து மூதாட்டியின் காது அறுத்து பாம்படம் திருட்டு
ஏா்வாடி அருகே வீடு புகுந்து மூதாட்டியின் காதை அறுத்து பாம்படத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருநெல்வேலி மாவட்டம், ஏா்வாடி அருகே திங்கள்கிழமை நள்ளிரவில் வீடு புகுந்து மூதாட்டியின் காதை அறுத்து பாம்படத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஏா்வாடி அருகே மீனாட்சிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சிவலிங்கம் (95). இவரது மனைவி பொன்னம்மாள் (90). தம்பதி திங்கள்கிழமை இரவு காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து உறங்கியுள்ளனராம்.
நள்ளிரவில் வீடு புகுந்த மா்ம நபா்கள் மூதாட்டியின் காதை பிளேடால் அறுத்து தங்க பாம்படத்தை திருடிச் சென்றுள்ளனா். இது குறித்த புகாரின் பேரில் ஏா்வாடி போலீஸாா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.
