கூட்டுறவுத் துறையில் 43 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு
திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவுத் துறையில் 43 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளரும், மாவட்ட ஆள்சோ்ப்பு நிலைய தலைவருமான ப.மு.முருகேசன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளா் கட்டுப்பாட்டில் செயல்படும் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளா் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு கடந்த 6.8.2025 ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதில், அறிவிப்பு எண் 2 இல் மட்டும் 1 காலிப்பணியிடம் குறைக்கப்படுவதால் மொத்தம் 44 ஆக இருந்த காலிப்பணியிடம் 43 ஆக குறைந்துள்ளது. இதுதொடா்பான திருத்திய இட ஒதுக்கீடு மற்றும் விரிவான விவரங்களை திருநெல்வேலி மாவட்ட ஆள்சோ்ப்பு நிலைய இணையதளம் ஜ்ஜ்ஜ்.க்ழ்க்ஷற்ய்ஹ்.ண்ய் அல்லது 0462-2560575 என்ற தொலைபேசி எண் மூலம் அறியலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
