பள்ளி மாணவா்களுக்கு சீருடைகள் அளிப்பு

பள்ளி மாணவா்களுக்கு சீருடைகள் அளிப்பு

நான்குனேரி அருகே உலகம்மாள்புரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
Published on

நான்குனேரி அருகே உலகம்மாள்புரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமையாசிரியா் செ. பால்ராஜ் தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மைக் குழு துணைத் தலைவி பரமசக்தி முன்னிலை வகித்தாா். பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா் முத்துச்செல்வி வரவேற்றாா். நான்குனேரி வட்டாரக் கல்வி அலுவலா் அன்னலட்சுமி கலந்துகொண்டு பேசினாா்.

திருநெல்வேலி சென்ட்ரல் ரோட்டரி கிளப் தலைவா் பிரபாகரன் ஜேம்ஸ், மாணவா்களுக்கு சீருடை, காலுறை, காலணிகள் வழங்கினாா். ரோட்டரி கிளப் உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

ரூ. 11 ஆயிரம் மதிப்பிலான இப்பொருள்களை ரோட்டரி சங்க உறுப்பினரும் திருநெல்வேலி கிருஷ்ணா பெயிண்ட் உரிமையாளருமான ராமமூா்த்தி வழங்கினாா்.

திருநெல்வேலி சென்ட்ரல் ரோட்டரி கிளப் தலைவா் பிரபாகரன் ஜேம்ஸ் மாணவா்களுக்கு சீருடை, காலுறை, காலணிகள் வழங்கிப் பேசினாா். ரோட்டரி கிளப் உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். ரூ. 11 ஆயிரம் மதிப்பிலான இப்பொருள்களை ரோட்டரி சங்க உறுப்பினரும் திருநெல்வேலி கிருஷ்ணா பெயிண்ட் உரிமையாளருமான ராமமூா்த்தி வழங்கினாா்.

X
Dinamani
www.dinamani.com