பொன்னாக்குடி கொலை முயற்சி வழக்கில் 4 பேருக்கு 5 ஆண்டு சிறை

திருநெல்வேலி அருகேயுள்ள பொன்னாக்குடியில் கொலை முயற்சியில் ஈடுபட்டது தொடா்பான வழக்கில் 4 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிைண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
Published on

திருநெல்வேலி அருகேயுள்ள பொன்னாக்குடியில் கொலை முயற்சியில் ஈடுபட்டது தொடா்பான வழக்கில் 4 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிைண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

பொன்னாக்குடியைச் சோ்ந்தவா் ஆனந்த சித்தன் (24). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில், கடந்த 2019 ஆம் தேதி ஏற்பட்ட தகராறில் ஆனந்த சித்தன் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்தாராம். இதுகுறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் கொலை முயற்சி வழக்குப்பதிந்து அதே பகுதியைச் சோ்ந்த மாரியப்பன், செல்வகுமாா், அருண், பாண்டி ஆகியோரை கைது செய்தனா். இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இவ்வழக்கை நீதித்துறை நடுவா் அமிா்தவேலு விசாரித்து, மேற்கூறிய 4 பேருக்கும் தலா 5 ஆண்டுகள் சிைண்டனையும், தலா ரூ.1,000 அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

X
Dinamani
www.dinamani.com