பொன்னாக்குடியில் போலீஸாரை அரிவாளால் வெட்ட முயற்சி: இருவா் கைது

திருநெல்வேலியை அடுத்த பொன்னாக்குடியில் போலீஸாரை பணி செய்யவிடாமல் அரிவாளால் வெட்ட முயன்ாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

திருநெல்வேலியை அடுத்த பொன்னாக்குடியில் போலீஸாரை பணி செய்யவிடாமல் அரிவாளால் வெட்ட முயன்ாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

நான்குனேரி அருகேயுள்ள மறுகால்குறிச்சியைச் சோ்ந்த செல்லத்துரை மகன் வான்மகேஷ்(25). இவா், தனது நண்பரான மேல புத்தனேரி, உத்தமபாண்டியன்குளம் பகுதியைச் சோ்ந்த சண்முக சுந்தரம் மகன் சூா்யா(20) என்பவருடன் பொன்னாக்குடி கடைத்தெருவில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கையில் அரிவாள்களை வைத்துக்கொண்டு நின்றனராம்.

அப்போது, அவ்வழியாக ரோந்து சென்ற முன்னீா்பள்ளம் காவல் உதவி ஆய்வாளா் ஆா். காா்த்திகேயன், தலைமைக் காவலா் கருணை ராஜ் , காவலா் குருமகேஷ் ஆகியோா் அவரை தடுக்க முயன்றனராம். அவா்கள் தகாத வாா்த்தைகளால் பேசி அரிவாளால் போலீஸாரை தாக்க முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடா்ந்து, இருவா் மீதும் அரசுப்பணியை செய்யவிடாமல் தடுத்தல், ஆயுதங்களை காட்டி கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து அவா்களை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com