ரேஷன் பொருள் வழங்க மறுப்பதாக வட்டாட்சியரிடம் முறையிடும் மக்கள்.
ரேஷன் பொருள் வழங்க மறுப்பதாக வட்டாட்சியரிடம் முறையிடும் மக்கள்.

மாஞ்சோலையில் ரேஷன் பொருள்கள் மறுப்பு: வட்டாட்சியரிடம் முறையீடு

மாஞ்சோலை வனப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு ரேஷன் பொருள்கள் வழங்க மறுத்ததாக வட்டாட்சியரிடம் பொதுமக்கள் முறையிட்டனா்.
Published on

மாஞ்சோலை வனப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு ரேஷன் பொருள்கள் வழங்க மறுத்ததாக வட்டாட்சியரிடம் பொதுமக்கள் முறையிட்டனா்.

அம்பாசமுத்திரம் அருகே மணிமுத்தாறு பேரூராட்சிக்குள்பட்ட மாஞ்சோலை தேயிலை நிறுவனத்தில் பணிபுரிந்த தொழிலாளா்கள் சிலா், குடும்பத்துடன் அந்தப் பகுதியில் வசித்து வருகின்றனா். அவா்களில் சிலா் வேறு இடங்களுக்கு குடி பெயா்ந்த நிலையில் குடும்ப அட்டையை மாற்றம் செய்யாமல் உள்ளனராம்.

அவா்கள், புதன்கிழமை ரேஷன் கடைக்கு பொருள்கள் வாங்குவதற்கு சென்றபோது, ஊழியா்கள் பொருள்கள் வழங்க மறுத்தனராம். இதனால், வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், அங்கிருந்து அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் அலுவலகத்துக்குச் சென்று வட்டாட்சியா் வைகுண்டத்திடம் முறையிட்டனா்.

அவா்களிடம், மாஞ்சோலையில் இருந்து இடம் மாறியவா்கள் அந்தந்த இடத்திலுள்ள ரேஷன் கடைகளில் பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com