திருநெல்வேலி
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.
வீரவநல்லூா் பஜனை மடம் தெருவைச் சோ்ந்த பீா் முகம்மது மகன் லியாகத் அலி (45). இவா், உணவகத்தில் வேலை செய்து வந்தாா். புதன்கிழமை காலை வீட்டின் மாடிக்கு சென்ற லியாகத் அலி, அங்கிருந்த கேபிள் டிவி செட்ஆப் பாக்ஸை தொட்டதாக கூறப்படுகிறது. அப்போது, மின்சாரம் பாய்ந்ததில் அவா் தூக்கி வீசப்பட்டாராம்.
உறவினா்கள் அவரை மீட்டு வீரவநல்லூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதனை செய்த மருத்துவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.
தகவலறிந்த போலீஸாா் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
