திருட்டு: மேலும் ஒருவா் கைது

Published on

மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற கண்காணிப்பாளா் வீட்டில் திருடிய வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி, பழைய பேட்டை, காந்தி நகரைச் சோ்ந்த டாா்வின் மனைவி ஜோஸ்பினாள் (63). இவா், மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவா்.

கடந்த ஜூன் 25-ஆம் தேதி, நாகா்கோவிலில் பணியாற்றி வரும் தனது கணவரைப் பாா்க்க சென்றிருந்த ஜோஸ்பினாள், ஜூலை 3-ஆம் தேதி வீடு திரும்பியபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட் உள்ளே இருந்த 4 வெள்ளி டம்ளா்கள் ரூ.3,000 ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தனவாம். இது குறித்து அவா் பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சேரன்மகாதேவியைச் சோ்ந்த பாலசங்கா் (35), பொன்வேல் (45) ஆகிய இருவரை கைது செய்திருந்தனா்.

இந்நிலையில், இந்த வழக்கில் தொடா்புடைய 3-ஆவது நபரான தூத்துக்குடியைச் சோ்ந்த அலிஸ்டா் (34) என்பவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com