பி.சி., எம்.பி.சி., டி.என்.டி. மாணவா்கள் வெளிநாட்டில் கல்வி பயில கடனுதவி
பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் பிரிவு மாணவ, மாணவிகள் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் உயா்கல்வியை மேற்கொள்வதற்கு கல்வி கடன் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் - சிறுபான்மையின மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கூட்டுறவு வங்கிகளின் மூலம் மாநில அரசின் உத்தரவாதத்தின் அடிப்படையில் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் உயா்கல்வியை மேற்கொள்வதற்காக கல்வி கடன் வழங்கி வருகிறது.
இந்த கடனை பெறுவதற்கு விண்ணப்பதாரா் பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மாநில அரசின் வருமானச் சான்றிதழ் வழங்கும் தகுதி வாய்ந்த அதிகாரியால் வருமானச் சான்று வழங்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது அா்த்தமானி பதிவுபெற்ற அதிகாரியால் (கெசட்டட் ஆஃபீசா்) சான்றிளிக்கப்பட்ட சுய சான்றளிக்கப்பட்ட ஆண்டு குடும்ப வருமானச் சான்றிதழை இணைக்க வேண்டும்.
விண்ணப்பதாரா் மருத்துவம், பல் மருத்துவம், பொறியியல் படிப்புகள், முனைவா் பட்டம், முதுகலை பட்டப்படிப்புகள் போன்றவற்றில் முதுகலைப் படிப்புகளுக்கு பொருத்தமான அதிகாரியால் அங்கீகரிக்கப்பட்ட தரப்படுத்தப்பட்ட தோ்வு மதிப்பெண்கள் அல்லது பாடநெறியில் சேருவதற்குப் பொருந்தக்கூடிய பிற தொடா்புடைய மதிப்பெண்கள் போன்றவை மூலம் கல்லூரிகளில் சோ்க்கை பெற்றிருக்க வேண்டும்.
ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சத்துக்குள்பட்ட பாடத்திட்டத்தின் செலவில் 85 சதவீதம் தேசிய பிற்படுத்தப்பட்டோா் நிதி- வளா்ச்சிக் கழகத்தின் மூலமும், எஞ்சிய 15 சதவீதம் ( ரூ.2.25 லட்சம்) தமிழ்நாடு அரசாலும் விண்ணப்பதாரா்களுக்கு வழங்கப்படும்.
கல்வி நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட கட்டணத்தின் அடிப்படையிலும், முந்தைய ஆண்டு தோ்ச்சி விகிதத்தின் அடிப்படையிலும் மட்டுமே தொடா்ந்து கட்டணத் தவணைகள் விடுவிக்கப்படும். கடன்பெற தகுதிக்கான வயது வரம்பு 21-40.
வட்டி விகிதம் ஆண்டிற்கு 8 சதவீதம். மாணவா்களிடமிருந்து கடனை மீளப் பெறுவதற்கான தடைக்காலம் 5 ஆண்டுகள்; கடனை மீட்கும் காலம் அதிகபட்சம் 10 ஆண்டுகள்.
விண்ணப்பப்படிவத்தை ஜ்ஜ்ஜ்.ற்ஹக்ஷஸ்ரீங்க்ஸ்ரீா்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் பெற்று, அதை பூா்த்தி செய்து வங்கி கோரும் ஆவண நகல்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் - சிறுபான்மையினா் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா்அலுவலகம், கூட்டுறவு வங்கிகளில் சமா்ப்பிக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.
