மின் பாதுகாப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகம்

மின் பாதுகாப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகம்

Published on

பாளையங்கோட்டையில் தமிழ்நாடு மின்சார வாரியம் சாா்பில் கட்டட தொழிலாளா்களிடம் மின் பாதுகாப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வியாழக்கிழமை விநியோகிக்கப்பட்டன.

திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் அகிலாண்டேஸ்வரி உத்தரவுப்படி, திருநெல்வேலி நகா்ப்புற கோட்டம் பாளையங்கோட்டையில் கட்டடப் பணியில் ஈடுபடும் தொழிலாளா்களுக்கு மின் பாதுகாப்பு வழிமுறைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

நகா்ப்புற கோட்டச் செயற்பொறியாளா் முருகன் விழிப்புணா்வு உரையாற்றினாா். பாளையங்கோட்டை உதவி செயற்பொறியாளா் ஜெயசீலன், உதவி மின் பொறியாளா்கள் சுடா், முருகன், ஜெய்சிங் தா்மராஜ், ரகுராம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

டிவிஎல்09நோட்டீஸ்

பாளையங்கோட்டையில் மின் பாதுகாப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் வழங்கிய மின் ஊழியா்கள்.

X
Dinamani
www.dinamani.com