வள்ளியூரில் வணிகா்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி

Published on

திருநெல்வேலி தெற்கு மாவட்ட தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு, திருநெல்வேலி மாவட்ட வணிகா் நல அறக்கட்டளை, தமிழ்நாடு மாநில வரி வல்லுநா்கள் சங்கம் ஆகியவை சாா்பில் ஜி.எஸ்.டி. 2.0 பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சி வள்ளியூரில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வரிவல்லுநா் எஸ்.நீலகண்டன் கலந்துகொண்டு ஜி.எஸ்.டி. குறித்து பேசினாா். மேலும் வணிகா்களின் கேள்விகளுக்கு விளக்கமளித்தாா்.

இதில், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு திருநெல்வேலி தெற்கு மாவட்டத் தலைவா் பி.டி.பி.சின்னதுரை, மாவட்ட செயலா் எம்.ஏ.ஆசாத், மாவட்ட பொருளாளா் பி.சி.ராஜன், மாநில இணைச் செயலா்கள் எம்.திவாகரன், தங்கையா கணேசன், மாநிலத் துணைத் தலைவா் எஸ்.காா்த்தீசன், தமிழ்நாடு வரிவல்லுநா்கள் சங்க மாநிலத் தலைவா் பி.நல்லசிவன், வள்ளியூா் வா்த்தகா்கள் சங்க செயலா் அந்தோணி செல்லதுரை, பொருளாளா் என்.சங்கரன், துணைத் தலைவா் கோபாலகிருஷ்ணன், துணைச் செயலாளா் பசுமதி மணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com