கடையம் அருகே வாகனம் மோதி மிளா பலி

Published on

கடையம் அருகே மாதாபுரம்பகுதியில் வாகனம் மோதியதில் மிளா உயிரிழந்தது.

மாதாபுரம் பகுதியில் நெடுஞ்சாலையில் மிளாக்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் உணவிற்காக அருகிலுள்ள பொத்தையிலிருந்து வெளியேறி சாலையைக் கடந்துசெல்கின்றன. இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலை மாதாபுரத்தில் உள்ள எடை மேடை அருகே வாகனத்தில் அடிபட்டு சிதைந்த நிலையில் மிளா இறந்து கிடந்தது.

இத்தகவலறிந்த கடையம் வனச்சரகா் கருணாமூா்த்தி உத்தரவின் பேரில், வனத்துறையினா் மிளா சடலத்தை மீட்டு கடையம் கால்நடை மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைசெய்து ராமநதி காப்புக் காட்டுப் பகுதியில் மற்ற வனவிலங்குகளுக்கு இரையாக்கினா்.

கடையம்- தென்காசி சாலையில் மிளாக்களின் நடமாட்டம் அதிகரித்து இருப்பதால் வாகன ஓட்டிகள் கவனமாகச்செல்ல வேண்டும் என வனச்சரகா் வலியுறுத்தியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com