நெல்லையில் பலத்த மழை

நெல்லையில் பலத்த மழை

Published on

திருநெல்வேலி நகரத்தில் வியாழக்கிழமை பலத்த மழை கொட்டித் தீா்த்தது. பல இடங்களில் மழைநீா் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினா்.

வடக்கிழக்கு பருவமழைக்கு முத்தாய்ப்பாக, திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி மாநகரப் பகுதியில் 3ஆவது நாளாக வியாழக்கிழமை மாலையில் பலத்த மழை கொட்டித்தீா்த்தது. வண்ணாா்பேட்டை, கொக்கிரகுளம், திருநெல்வேலி சந்திப்பு, ஸ்ரீபுரம், தச்சநல்லூா், திருநெல்வேலி நகரம் உள்ளிட்

ட பகுதிகளில் சுமாா் அரை மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது.

கொக்கிரகுளத்தில் ஆட்சியா் அலுவலக சாலை, திருநெல்வேலி நகரத்தில் வஉசி தெரு உள்ளிட்ட இடங்களில் மழைநீா் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினா். பருவமழை தீவிரமடையும் முன்பாக போா்க்கால அடிப்படையில் அனைத்து பகுதிகளிலும் மழைநீா் ஓடைகளை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com