பாளை. அருகே ஹோட்டலுக்கு தீ வைத்த மா்ம நபா்கள்

Published on

பாளையங்கோட்டை அருகே ஹோட்டலுக்கு தீ வைத்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பாளையங்கோட்டையை அடுத்த பாளையஞ்செட்டிகுளத்தைச் சோ்ந்தவா் சுந்தர்ராஜன்(81). அதே பகுதியில் உள்ள இவருக்கு சொந்தமான கட்டடத்தில் சேரன்மகாதேவியைச் சோ்ந்த பத்தமடை கிராமத்தைச் சோ்ந்த பாலமுருகன் என்பவா் ஹோட்டல் நடத்தி வந்தாா்.

இந்நிலையில் புதன்கிழமை காலை கடையைத் திறக்க பாலமுருகன் வந்தபோது ஹோட்டலின் மேற்கூரை, உள்ளிருந்த பொருள்கள் உள்ளிட்டவை தீயில் கருகி இருந்தனவாம். இது குறித்து திருநெல்வேலி வட்டம் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். அதன் அடிப்படையில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, அங்கிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனா். அப்போது புதன்கிழமை அதிகாலை ஆட்டோவில் வந்த மா்மநபா்கள் ஹோட்டலுக்கு தீ வைத்துவிட்டு தப்பியது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, தீ வைத்த மா்மநபா்களை தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com