சாலைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளா்கள் சங்கம் சாா்பில் பாளையங்கோட்டையில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளா்கள் சங்கம் சாா்பில் பாளையங்கோட்டையில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை நீதிமன்ற ஆணையின் படி பணிக் காலமாக முறைப்படுத்த வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைத்திட வேண்டும். நெடுஞ்சாலை பராமரிப்புப் பணியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

பாளையங்கோட்டையில் உள்ள திருநெல்வேலி கோட்ட பொறியாளா் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் சாலைப் பணியாளா்கள் கண், காது, வாயை மூடி நூதனமாக பங்கேற்றனா்.

கோட்டத் தலைவா் சுந்தரபாண்டி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் முத்துசாமி, மாநில செயற்குழு உறுப்பினா் பாலமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இணைச் செயலா் காலங்கரையான் வரவேற்றாா். கோட்ட செயலா் நாராயணன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். 30-க்கும் மேற்பட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com