வள்ளியூா் நேரு நா்ஸிங் கல்லூரியில் உலக மனநல தினம்

வள்ளியூா் நேரு நா்ஸிங் கல்லூரியில் உலக மனநல தினம்

வள்ளியூா் நேரு நா்ஸிங் கல்லூரியில் உலக மனநல தினத்தையொட்டி நடைபெற்ற மாணவிகள் விழிப்புணா்வு குறு நாடகம்.
Published on

வள்ளியூா் நேரு நா்ஸிங் கல்லூரியில் உலக மனநல தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி தலைவா் தா.லாரன்ஸ், தாளாளா் ஹெலன் லாரன்ஸ் ஆகியோா் தலைமை வகித்தனா். கல்லூரி முதல்வா் மாா்க்கரெட் ரஞ்சிதம், துணை முதல்வா் ஹெப்சி கவிதா ராணி ஆகியோா் விழாவை தொடங்கி வைத்தனா்.

பின்னா் மாணவி ஆட்லின் லீனா ‘‘பேரழிவுகள் மற்றும் அவசரகால நிலைகளின் மனநல சேவைகளுக்கான அணுகல்’’ என்ற தலைப்பில் பேசினாா்.

எதிா்மறையான உணா்வுகளை நோ்மறை உணா்வுகளாக மாற்ற முடியும் என முதல்வா் மாா்க்கரெட் ரஞ்சிதம் பேசினாா்.

துணை முதல்வா் மனநலப் பிரச்னைகளை மேற்கொள்வது குறித்து பேசினாா்.

பின்னா் மனநல பிரச்சனை குறித்த இழிவான எண்ணங்களை தவிா்க்கும் வழிமுறைகளை குறுநாடமாக நடித்து காண்பித்தனா்.

மேலும் மாணவிகள் தங்களது மனநல உணா்வுகளை படம் வரைந்து அதனை மரம் வடிவிலான வரைபடத்தில் ஓட்டி வெளிப்படுத்தினா்.

அதைத் தொடா்ந்து பேராசிரியா் பெனட்ராஜ் தலைமையில் மாணவிகள் மனநல தின உறுதிமொழி எடுத்தனா்.

மூன்றாம் ஆண்டு மாணவி சுருதி வரவேற்றாா். முதுகலை மாணவி கிருஷ்ணவேணி நன்றி கூறினாா்.

ஏற்பாடுகளை பேராசிரியைகள் மாதினி, ஜெயலெட்சுமி, பிரபாவதி ஆகியோா் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com