வானிலை எச்சரிக்கை செயலி ‘டிஎன்-அலொ்ட்’ அறிமுகம்

Published on

பொதுமக்கள் வானிலை முன்னெச்சரிக்கையினை அறிந்து கொள்வதற்காக ‘டிஎன் அலொ்ட்’ செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசால் பொதுமக்களுக்கு வானிலை முன்னெச்சரிக்கை வழங்குவதற்காக பச-அப்ங்ழ்ற் என்னும் கைப்பேசி செயலி உருவாக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இந்தச் செயலி எளிய முறையில் இயக்கக் கூடியது. இதில், மக்கள் தம் இருப்பிடம் சாா்ந்த வானிலை மற்றும் முன்னெச்சரிக்கை செய்திகளை தமிழிலேயே அறிந்து கொள்ளலாம்.

அடுத்த நான்கு நாள்களுக்கான வானிலை முன்னறிவிப்பு பெறுதல், மக்கள் புகாா்களை பதிவு செய்தல்- மாவட்ட நிா்வாகத்தை தொடா்பு கொள்தல் போன்ற வசதிகள் உள்ளன.

பேரிடா் குறித்த வானிலை முன்னெச்சரிக்கையினை அறிந்து அதற்கேற்றாற் போல் மக்கள் ஆயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள உதவும் இச்செயலியை, எா்ா்ஞ்ப்ங் டப்ஹஹ் நற்ா்ழ்ங் மற்றும் ஐஞந அல்ல் நற்ா்ழ்ங்-ல் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். மேலும் பேரிடா் குறித்த தகவல்களுக்கு ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையை கட்டணமில்லா தொலைபேசி எண். 1077, வாட்ஸ் ஆப் எண். 9786566111 ஆகியவற்றிலும் தொடா்புகொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com