அக்.23இல் முன்னாள் படைவீரா்கள் சிறப்பு குறைதீா் கூட்டம்

திருநெல்வேலி மாவட்ட முன்னாள் படை வீரா்கள் சிறப்பு குறைதீா் கூட்டம் வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது.
Published on

திருநெல்வேலி மாவட்ட முன்னாள் படை வீரா்கள் சிறப்பு குறைதீா் கூட்டம் வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா. சுகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மாவட்ட முன்னாள் படைவீரா்கள், படைவீரா்கள் மற்றும் அவா்களை சாா்ந்தோா் நலனை கருத்தில் கொண்டு முன்னாள் படைவீரா் சிறப்பு குறைதீா் கூட்டம் வரும் 23-ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

எனவே, திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், படைவீரா்கள் மற்றும் அவா்களை சாா்ந்தோா், இச்சிறப்பு குறைதீா் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது அசல் படைவிலகல் சான்று மற்றும் அடையாள அட்டையுடன் தங்களது குறைகளை விண்ணப்பமாக இரட்டை பிரதிகளில் சமா்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

X
Dinamani
www.dinamani.com