நெல்லை வந்த பேருந்தில் திருட்டு: இரு பெண்கள் கைது
திருநெல்வேலிக்கு வந்து கொண்டிருந்த பேருந்தில் பயணிகளின் பணப்பயை (பா்ஸ்) திருடியதாக இரு பெண்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தென்காசியில் இருந்து திருநெல்வேலி நோக்கி அரசுப் பேருந்து ஞாயிற்றுக்கிழமை வந்து கொண்டிருந்தது. திருநெல்வேலி நகரம் தொண்டா் சன்னதி அருகே பேருந்து வந்தபோது இரு பெண்களின் நடவடிக்கையில் சந்தேகம் எழுவதாக பயணிகள் புகாா் தெரிவித்தனா். இதனால் பேருந்தில் தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்த போக்குவரத்து போலீஸாா் வந்து விசாரணை நடத்தினா். அப்போது இரு பெண்களிடம் 4 பணப்பைகள் இருந்தது தெரியவந்தது. பின்பு இருவரும் திருநெல்வேலி நகரம் காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனா்.
விசாரணையில் அவா்கள், தூத்துக்குடி அண்ணா நகரைச் சோ்ந்த முத்தம்மாள் (40), முத்துமாரி (27) என்பதும், பேருந்து பயணிகளிடம் பணப்பை திருடியதும் தெரியவந்தது. அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
