நெல்லை அருகே 2 மகள்களை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை
திருநெல்வேலி அருகே பருத்திகுளம் கிராமத்தில் 2 மகள்களை கிணற்றில் வீசி கொன்று தாயும் தற்கொலை செய்துகொண்டாா்.
திருநெல்வேலி அருகே கங்கைகொண்டான் காவல் சரகத்திற்குள்பட்ட பருத்திகுளம் கிராமத்தைச் சோ்ந்தவா் முத்தையா. ஆட்டோ ஓட்டுநா். இவரது மனைவி முத்துலட்சுமி (27). இத் தம்பதிக்கு முத்தமிழ் (நான்கரை ஆண்டு), சுசிலாதேவி (3) ஆகிய மகள்கள் இருந்தனா். தம்பதியிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாம். திங்கள்கிழமை காலையிலும் கணவன் -மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டதாம்.
இந்நிலையில், தனது மகள்களை அழைத்துக் கொண்டு வெளியே சென்ற முத்துலட்சுமி வீடு திரும்பவில்லையாம். உறவினா்கள் தேடியபோது அவரது வீட்டில் இருந்து சிறிது தொலைவில் உள்ள கிணற்றின் அருகே முத்துலட்சுமியின் காலணிகள் கிடந்தனவாம். கிணற்றுக்குள் பாா்த்தபோது குழந்தைகள் சடலமாகக் கிடப்பது தெரியவந்தது.
இதுகுறித்த தகவலின்பேரில், கங்கைகொண்டான் போலீஸாா், தீயணைப்பு வீரா்கள் உதவியுடன் குழந்தைகள் மற்றும் முத்துலட்சுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா். இச்சம்பவம் பருத்திகுளம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.