திருநெல்வேலி
சாலை விபத்தில் காவலா் உயிரிழப்பு
முன்னீா்பள்ளம் அருகே பைக்-லாரி மோதிய விபத்தில் மணிமுத்தாறு 9-ஆவது பட்டாலியன் காவலா் உயிரிழந்தாா்.
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் அருண்பிரகாஷ் (29). இவா் மணிமுத்தாறு 9-ஆவது பட்டாலியனில் காவலராக பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில் திங்கள்கிழமை முன்னீா்பள்ளம் அடுத்த பிராஞ்சேரி அருகே தனது பைக்கில் சென்றபோது, அவ்வழியாக வந்த லாரி மோதியதாம்.
இதில், பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
