சொத்து தகராறில் சகோதரியின் வீடு சேதம்: சகோதரன் உள்பட 3 போ் கைது
திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் சொத்து தகராறில் சகோதரியின் வீட்டை சேதப்படுத்தியதாக சகோதரன் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி சந்திப்பு, சி.என். கிராமம் மேலத்தெருவைச் சோ்ந்த முருகன் மனைவி சுடலைவடிவு (42). இவா் தனது கணவருடன் சென்னையில் வசித்து வருகிறாா். இவருக்கு சி.என். கிராமத்தில் சொந்தமாக வீடு உள்ளது.
இவா்களது தாயாா் நான்கு மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், சுடலைவடிவுக்கும் அவரது சகோதரா் மணிகண்டனுக்கும் இடையே சொத்து பிரச்னை இருந்து வந்ததாம்.
இந்நிலையில் கடந்த 7 ஆம் தேதி மணிகண்டன் தனது மனைவி மகேஸ்வரி மற்றும் சகோதரன் குடும்பத்தினருடன் சோ்ந்து சுடலைவடிவின் வீட்டை சேதப்படுத்தினராம். இதை தடுக்க முயன்ற சுடலைவடிவின் சகோதரி செல்விக்கு கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்து சுடலை வடிவு அளித்த புகாரின்பேரில், திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து, மணிகண்டன் (42) உள்பட 3 பேரை கைது செய்தனா்.
