அக்.24- ல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் அக்.24-ஆம் தேதி ஆட்சியா் அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
Published on

திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் அக்.24-ஆம் தேதி ஆட்சியா் அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

எனது தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், அனைத்துத் துறை அலுவலா்களும் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க உள்ளனா்.

எனவே, திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள், விவசாயப் பிரதிநிதிகள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் என மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com