திருநெல்வேலி
சக தொழிலாளி மீது தாக்குதல்: இளைஞா் கைது
பாளைங்கோட்டையில் சலூனில் பணியாற்றும் சக தொழிலாளியை தாக்கியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
தென்காசி மாவட்டம் மருதம்புத்தூா் அருகே மீனாட்சிபுரத்தை சோ்ந்தவா் ஜெசிகரண் (22). இவா் பாளையங்கோட்டையில் உள்ள சலூனில் வேலை பாா்த்து வருகிறாா். இவருடன் அதே கடையில் பணியாற்றும் ஆா்த்திராஜ்(26) என்பவரும் ஒரே அறையில் தங்கியுள்ளனா்.
இந்நிலையில் கடந்த 15-ஆம் தேதி இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, ஜெசிகரணை மது பாட்டிலால் ஆா்த்திராஜ் தாக்கினாராம். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஆா்த்திராஜை கைது செய்தனா்.
